விஷம் குடித்து வாலிபர் தற்கொலை
விபத்தில் நண்பர்கள் இறந்த துக்கம் தாங்க முடியாமல் விஷம் குடித்து வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
விழுப்புரம்
விழுப்புரம்
விக்கிரவாண்டி தாலுகா ஏழுசெம்பொன் கிராமத்தை சேர்ந்தவர் கந்தவேல் மகன் ஓம்பிரகாஷ்(வயது 21). இவரது நண்பர்களான அதே கிராமத்தை சேர்ந்த சவுந்தர்ராஜன்(22), மோகன்(22) ஆகிய இருவரும் கடந்த 10-ந் தேதி சாலை விபத்தில் இறந்தனர். இந்த துக்கம் தாங்க முடியாமல் சம்பவத்தன்று ஓம்பிரகாஷ், விஷத்தை எடுத்து குடித்து விட்டார். இதில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை உறவினர்கள் மீட்டு சிகிச்சைக்காக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று காலை பரிதாபமாக இறந்தார். இதுகுறித்த புகாரின்பேரில் காணை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story