வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
சேலம்

எடப்பாடி:-

கொங்கணாபுரம் பேரூராட்சி ரங்கம்பாளையம் காலனி பகுதியை சேர்ந்த மணி- பாப்பாத்தி தம்பதிக்கு உமா மகேஸ்வரி என்ற மகளும் வினோத்குமார் (28) என்ற மகனும் உள்ளனர். இந்நிலையில் நேற்று முன்தினம் வினோத்குமார் தனது தாயின் ேசலையால் மின்விசிறியில் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கத்தினர் உதவியுடன் மகனை மீட்ட பெற்றோர் எடப்பாடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். இதுகுறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story