லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி


லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பலி
x

சென்னை அருகே லாரி சக்கரத்தில் சிக்கி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

சென்னை

சென்னையை அடுத்த புழல் புத்தகரம் மீனாட்சி நகரை சேர்ந்தவர் அசோக்குமார் (வயது 26). இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்து மோட்டார்சைக்கிளில் வீட்டுக்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். மாத்தூர் மஞ்சம்பாக்கம் ஜங்ஷன் அருகே வந்தபோது பின்னால் வந்த லாரி, இவரது மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் மோட்டார்சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே விழுந்த அவரது தலை மீது லாரியின் சக்கரம் ஏறி இறங்கியது. இதில் அசோக்குமார் சம்பவ இடத்திலேயே தலை நசுங்கி பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து மாதவரம் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து லாரி டிரைவரான நாமக்கல்லை சேர்ந்த பழனிசாமியை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story