பஸ் மோதி வாலிபர் பலி


பஸ் மோதி வாலிபர் பலி
x

அரக்கோணம் அருகே பஸ் மோதி வாலிபர் பலியானார்.

ராணிப்பேட்டை

அரக்கோணத்தை அடுத்த சாலை கிராமத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது 24). தெருக்கூத்து கலைஞர். திருமணமாகி மனைவி சுகன்யா மற்றும் இரண்டு குழந்தைகள் உள்ளனர். இந்தநிலையில் செல்வம் சாலை கிராமத்தில் இருந்து அரக்கோணத்தில் உள்ள மனைவியை பார்ப்பதற்காக நேற்று இரவு மோட்டார் சைக்கிளில் அரக்கோணம் - சோளிங்கர் ரோடு ரெயில்வே மேம்பாலம் அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது அரக்கோணத்தில் இருந்து சோளிங்கர் நோக்கி சென்ற தனியார் தொழிற்சாலை பஸ் எதிர்பாரத விதமாக மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் கீழோ விழுந்த செல்வம் பஸ்சில் சிக்கி படுகாயம் அடைந்தார். அவர் அவ்வழியே சென்றவர்கள் மீட்டு அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு செல்வத்தை பரிசோதித்த போது அவர் இறந்து விட்டது தெரிய வந்தது.

இந்த விபத்து குறித்து அரக்கோணம் டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விபத்து ஏற்படுத்திவிட்டு தப்பி ஓடிய பஸ் டிரைவரை தேடி வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story