கார் மோதி வாலிபர் சாவு


கார் மோதி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 19 Aug 2023 12:30 AM IST (Updated: 19 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon

கார் மோதி வாலிபர் இறந்தார்.

மயிலாடுதுறை

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மயிலக்கோவில் கிராமத்தை சேர்ந்த ராஜ்குமார் மகன் பாலமுருகன் (வயது23). இவர் நேற்று முன்தினம் கொள்ளிடம் போலீஸ் நிலையம் அருகே சிதம்பரம்- சீர்காழி சாலையோரம் நின்று கொண்டிருந்தார். அப்போது சென்னையில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்த கார், பாலமுருகன் மீது எதிர்பாராதவிதமாக மோதி பின்னர் சாலையோரம் உள்ள பழைய போலீஸ் நிலைய கட்டிடத்தில் மோதி நின்றது. இதில் தலையில் படுகாயம் அடைந்த பாலமுருகனை அக்கம்பக்கத்தினர் தனியார் ஆம்புலன்ஸ் மூலம் சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு பாலமுருகன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார். காரை ஓட்டி வந்த சென்னை மந்தைவெளி பகுதியை சேர்ந்த சங்கர் மற்றும் அவருடைய உறவினர் மாலா ஆகிய 2 பேருக்கும் நெத்தியில் காயம் ஏற்பட்டது. இருவரும் சிதம்பரம் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இதுதொடர்பாக கொள்ளிடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story