மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி


மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலி
x
தினத்தந்தி 14 Sept 2023 1:15 AM IST (Updated: 14 Sept 2023 1:15 AM IST)
t-max-icont-min-icon

கொங்கணாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார்.

சேலம்

எடப்பாடி:-

கொங்கணாபுரம் அருகே மோட்டார் சைக்கிள் மீது பஸ் மோதி வாலிபர் பலியானார்.

வாலிபர்

சேலம் மாவட்டம் எடப்பாடி ஒன்றியம் வேம்பனேரி வடக்கு குட்டச்சி வளவு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல். இவருடைய மகன் சதீஷ்குமார் (வயது 27). திருமணமாகாத இவர் சங்ககிரி பகுதியில் வாகனங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டும் கடை நடத்தி வந்தார்.

இந்த நிலையில் சதீஷ்குமார் நேற்று மாலை கடையை அடைத்துவிட்டு தனது மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு சென்று கொண்டிருந்தார். அப்போது சங்ககிரி - ஓமலூர் சாலை எட்டிகுட்டைமேடு பகுதியில் வந்தபோது தனியார் கல்லூரி பஸ் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

பலி

இதில் தூக்கி வீசப்பட்டு பலத்த காயம் அடைந்த சதீஷ்குமார் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற கொங்கணாபுரம் போலீசார் சதீஷ்குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Related Tags :
Next Story