குளத்தில் மூழ்கி வாலிபர் பலி


குளத்தில் மூழ்கி வாலிபர் பலி
x

ஏர்வாடி அருகே குளத்தில் மூழ்கி வாலிபர் பலியானார்.

திருநெல்வேலி

ஏர்வாடி:

சேலம் மாவட்டம் மேட்டூர் அருகே பள்ளிப்பட்டி மேச்சேரியைச் சேர்ந்தவர் கருப்பண்ணன். இவருடைய மகன் ரஞ்சித்குமார் (22). இவர் நெல்லை மாவட்டம் ஏர்வாடி அருகே வடுகச்சிமதில் கிராமத்தில் ராணுவத்தில் சேருவதற்காக தனியார் பயிற்சி மையத்தில் தங்கியிருந்து படித்து வந்தார். இவர் நேற்று முன்தினம் மாலையில் நண்பர்களுடன் வடுகச்சிமதில் குளத்தில் குளிக்க சென்றார். அப்போது எதிர்பாராதவிதமாக குளத்தின் ஆழமான பகுதியில் ரஞ்சித்குமார் மூழ்கினார். இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த நண்பர்கள் அவரை காப்பாற்ற முயன்றும் முடியவில்லை. இதுகுறித்து நாங்குநேரி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று, குளத்தில் இறங்கி தேடும் பணியில் ஈடுபட்டனர். பின்னர் இரவில் இருள் சூழ்ந்ததால் தேடும் பணி நிறுத்தப்பட்டது. தொடர்ந்து நேற்று அதிகாலையில் மீண்டும் தேடுதல் பணியில் ஈடுபட்டனர். அப்போது ரஞ்சித்குமாரை பிணமாக மீட்டனர். அவரது உடலை திருக்குறுங்குடி போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story