மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு


மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் சாவு
x

வேகத்தடையில் ஏறி இறங்கும்போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

திருவண்ணாமலை

ஆரணி

ஆரணியை அடுத்த அய்யம்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் அன்பழகன். இவருடைய மகன் பரசுராமன் (வயது 23). இவர் அரிசி ஆலையில் மிஷனரி மெக்கானிக்கல் வேலை செய்து வந்தார்.

இவரும் இவரது நண்பர் சதீஷ் என்பவரும் கடந்த 22-ந் தேதி இரவு ஆரணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்துவிட்டு மீண்டும் ஊருக்கு திரும்பி சென்றனர்.

முள்ளிப்பட்டு அடுத்த பாபா நகர் அருகே சாலையில் உள்ள வேகத்தடையில் ஏறி இறங்கும் போது நிலை தடுமாறி மோட்டார் சைக்கிளில் இருந்து பரசுராமன், சதீஷ் இருவரும் தவறி விழுந்தனர்.

இதில் பரசுராமனுக்கு பலத்த காயமும் சதீசுக்கு லேசான காயமும் ஏற்பட்டது. உடனடியாக அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் உதவியுடன் ஆரணி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

பின்னர் மேல் சிகிச்சைக்காக பரசுராமனை வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் பரிசோதித்து வரும் வழியிலேயே அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து அன்பழகன் ஆரணி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் மகேந்திரன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.


Next Story