மோட்டார்சைக்கிள்கள் மோதலில் வாலிபர் பலி
மோட்டார்சைக்கிள்கள் மோதலில் வாலிபர் பலியானார்.
வந்தவாசி
மோட்டார்சைக்கிள்கள் மோதலில் வாலிபர் பலியானார்.
வந்தவாசியை அடுத்த தேசூர் மாதா கோவில் தெருவை சேர்ந்தவர் அந்தோணி செல்வராஜ் (வயது 37). இவர் காஞ்சீபுரத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இவர் கடந்த 1-ந் தேதி இரவு வேலைக்கு சென்று விட்டு மோட்டார்சைக்கிளில் திரும்பிக் கொண்டு இருந்தார். கண்டவர்ரெட்டி- தேசூர் ரோட்டில் கூத்தம்பட்டு அருகே சென்றபோது எதிரே அடையாளம் தெரியாமல் வந்த மோட்டார்சைக்கிள் அந்தோணி செல்வராஜ் ஓட்டி வந்த மோட்டார்சைக்கிள் மீது மோதி விபத்துக்குள்ளானது. இதில் படுகாயம் அடைந்த அந்தோணி செல்வராஜை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக வந்தவாசி அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக அவரது மனைவி பொன்னூர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். அதன்பேரில் பொன்னூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.