மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை


மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
x

மாணவி பலாத்கார வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோர்ட்டு தீர்ப்பளித்தது.

அரியலூர்

மாணவி பலாத்காரம்

அரியலூர் மாவட்டம், வாரியங்காவல் கிராமத்தை சேர்ந்தவர் வினோத்குமார்(வயது 27). இவருக்கும், ஒரு பெண்ணுக்கும் கள்ளத்தொடர்பு இருந்துள்ளது. இந்நிலையில் கடந்த 2021-ம் ஆண்டு ஜனவரி மாதம் 20-ந் தேதி வீட்டில் தனியாக இருந்த அந்த பெண்ணின் மகளான 15 வயதுடைய 10-ம் வகுப்பு மாணவியை, வினோத்குமார் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

இது குறித்து மாணவியின் தந்தை அளித்த புகாரின்பேரில், போக்சோ சட்டத்தின் கீழ் ஜெயங்கொண்டம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வினோத்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு அரியலூரில் உள்ள மகிளா கோர்ட்டில் நடைபெற்றது. அரசு வக்கீல் ராஜா ஆஜராகி வாதாடினார்.

20 ஆண்டுகள் சிறை

இந்த வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் நீதிபதி ஆனந்தன் நேற்று தீர்ப்பு கூறினார். இதில், குற்றவாளி வினோத்குமாருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.2 லட்சம் அபராதமும் விதித்தார். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிக்கு ரூ.7 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று அரசுக்கு உத்தரவிட்டார்.

தீர்ப்பை கேட்டு கோர்ட்டு வளாகத்தில் வினோத்குமாரின் தாயார் கதறி அழுதார். பின்னர் வினோத்குமாரை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் திருச்சி மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.


Next Story