டாஸ்மாக் கடை அருகே வாலிபர் வெட்டிக் கொலை
நெல்லையில் இரவில் டாஸ்மாக் கடை அருகில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
நெல்லையில் இரவில் டாஸ்மாக் கடை அருகில் வாலிபர் சரமாரியாக வெட்டிக் கொைல செய்யப்பட்டார். இதுதொடர்பாக மர்மகும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
வாலிபர்
நெல்லை பாளையங்கோட்டை அருகே உள்ள கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர் பார்வதி நாதன் (வயது 25).
இவர் நேற்று மாலை மோட்டார் சைக்கிளில் ஆதிபராசக்திநகரில் உள்ள டாஸ்மாக் கடைக்கு சென்றார். அங்கு மதுபாட்டில் வாங்கிக் கொண்டு வெளியே வந்தார்.
வெட்டிக்கொலை
அப்போது அங்கு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்மகும்பல் திடீரென அவரை வழிமறித்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் பார்வதி நாதன் ரத்த வெள்ளத்தில் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
பின்னர் அந்த கும்பல் மோட்டார் சைக்கிள்களில் தப்பி சென்று விட்டது.
போலீஸ் மோப்ப நாய்
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சிவந்திப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
சம்பவ இடத்திற்கு போலீஸ் மோப்ப நாய் ரிக்கி வரவழைக்கப்பட்டது. அது சம்பவ இடத்தில் இருந்து சிறிது தூரம் ஓடி நின்றது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை.
போலீசார் விசாரணை
கடந்த சில நாட்களுக்கு முன்பு செல்போனை எடுத்து வைத்தது தொடர்பாக தகராறு ஏற்பட்டுள்ளது. எனவே இந்த பிரச்சினை தொடர்பாக கொலை நடந்ததா? அல்லது வேறு ஏதேனும் காரணமா என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் கொலையாளிகளை வலைவீசி தேடி வருகின்றனர்.
டாஸ்மாக் கடை அருகில் இரவில் மர்மகும்பலால் வாலிபர் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.