எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் படுகாயம்


எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் படுகாயம்
x

அரக்கோணத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில் மோதி வாலிபர் படுகாயம் அடைந்தார்.

ராணிப்பேட்டை

அரக்கோணம்

பெங்களூருவில் இருந்து - அசாம் மாநிலத்திற்கு செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று மாலை அரக்கோணம் ரெயில் நிலையத்திற்குள் வந்து கொண்டிருந்தது.

அப்போது அரக்கோணம் ரெயில் நிலைய பகுதி இரட்டை கண் வாராவதி அருகே தண்டவாள பகுதியில் அரக்கோணம் ஏ.பி.எம். சர்ச் பகுதியை சேர்ந்த அருண் (வயது 28) என்பவர் நடந்து சென்று கொண்டிருந்தார். அந்த வழியாக ரெயில் வருவதை கண்ட அருண் தண்டவாளத்தை கடக்க முற்பட்ட போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

இதனை கண்ட ரெயில் என்ஜின் டிரைவர் ரெயிலை நிறுத்துவதற்க்குள் சுதாரித்து எழுந்த அருண் மீது ரெயில் உரசியபடி சென்றது. இதில் அருண் தோள் பட்டையில் பலத்த காயம் ஏற்பட்டது.

இதனை கண்ட ரெயில்வே போலீசார் அருணை மீட்டு சிகிச்சைக்காக அரக்கோணம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

1 More update

Related Tags :
Next Story