கும்மிடிப்பூண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி


கும்மிடிப்பூண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலி
x

கும்மிடிப்பூண்டி அருகே அடையாளம் தெரியாத வாகனம் மோதி வாலிபர் பலியானார்.

திருவள்ளூர்

கும்மிடிப்பூண்டி அடுத்த எளாவூர் அருகே துராப்பள்ளம் கிராமத்தில் உள்ள பஜனை கோவில் தெருவில் வசித்து வந்தவர் பாலாஜி (வயது 24). இவர், கடந்த செய்வாய்கிழமை இரவு தனது வீட்டிலிருந்து கும்மிடிப்பூண்டி நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். வழியில் சின்ன ஒபுளாபுரத்தில் உள்ள தனியார் பிளைவுட் தொழிற்சாலை அருகே மோட்டார் சைக்கிள் வரும்போது, அதே திசையில் சென்னை நோக்கிச்சென்ற அடையாளம் தெரியாத வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிளின் பின்னால் மோதி விட்டு நிற்காமல் சென்று விட்டது.

இதில் பலத்த காயம் அடைந்த வாலிபர் பாலாஜி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக பொன்னேரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் கும்மிடிப்பூண்டி சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story