ரெயில் மோதி வாலிபர் பலி


ரெயில் மோதி வாலிபர் பலி
x

ரெயில் மோதி வாலிபர் பலியானார்.

அரியலூர்

அரியலூர் மாவட்டம் செந்துறை அருகே உள்ள நின்னியூர் கிராமத்தைச் சேர்ந்தவர் பரமசிவம் மகன் விக்னேஷ்(வயது 30). இவருக்கு 8 ஆண்டுகளுக்கு முன்பு திருச்சியில் உள்ள ஒரு பெண்ணுடன் திருமணம் நடந்துள்ளது. அதன் பின்னர் இவர் திருச்சியில் தனது மாமியார் வீட்டில் வசித்து வருகிறார். விக்னேசுக்கு சற்று காது கேட்கும் திறன் குறைவென்று தெரிகிறது. இந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு நின்னியூர் கிராமத்தில் நடந்த தனது தம்பியின் திருமணத்திற்காக ஊருக்கு வந்துள்ளார். அப்போது அவருக்கு வயிற்றுப்போக்கு பிரச்சினை இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அப்பகுதியில் உள்ள ரெயில்வே தண்டவாளப் பகுதியில் இயற்கை உபாதைக்காக சென்றதாக தெரிகிறது. அப்போது நள்ளிரவில் திருச்சி நோக்கி சென்ற விரைவு ரெயில் மோதி சம்பவ இடத்திலேயே உடல் துண்டாகி பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து தகவல் அறிந்த விருத்தாசலம் ரெயில்வே போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story