தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம் தகவல்


தமிழகத்தில் வெப்பநிலை அதிகரிக்கும்: வானிலை மையம் தகவல்
x

சென்னையில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படுமென வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.

சென்னை,

தமிழகத்தில் வெப்பநிலை இயல்பை விட அதிகரிக்கும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது;

07-03-2024 முதல் 13-3-2024 வரை தமிழகம், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.

அதிகபட்ச வெப்பநிலை:

தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இன்றும் நாளையும் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது அசௌகரியம் ஏற்படலாம்.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு:

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33-34 டிகிரி செல்சியஸ் ஆகவும் குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும்.


Next Story