தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை மையம் தகவல்


தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு வெப்பநிலை அதிகரிக்கும்..! வானிலை மையம் தகவல்
x

சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.

சென்னை,

தென் இந்தியப் பகுதிகளின் மேல் வளி மண்டலத்தின் கீழடுக்குகளில் கிழக்கு திசை காற்றும், மேற்கு திசை காற்றும் சந்திக்கும் பகுதி நிலவுகிறது. இதன் காரணமாக, ஏப்ரல் 7 முதல் ஏப்ரல் 11 ஆம் தேதி வரை தென் தமிழகம் மற்றும் வட தமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

அதே வேளையில், ஏப்ரல் 7 முதல் 11 வரை தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பிலிருந்து 2 - 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையை பொறுத்தவரையில், வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் கானப்படும் என்றும், அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் வரை இருக்கக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வுமையம் தகவல் தெரிவித்துள்ளது.


Next Story