வெள்ளகோவில், முத்தூர் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு
வெள்ளகோவில், முத்தூர் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
வெள்ளகோவில், முத்தூர் பகுதி கோவில்களில் பிரதோஷ வழிபாடு நடந்தது.
பிரதோஷம்
மேட்டுப்பாளையம் அருகே மாந்தபுரத்தில் அமைந்துள்ள மாந்தீஸ்வரர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு சிவபெருமானுக்கும், நந்திக்கும் பால், பஞ்சாமிர்தம், தயிர், தேன், விபூதி, சந்தனம், இளநீர், பன்னீர், கனிகள் அபிஷேகமும் மலர்களால் அலங்காரம் செய்யப்பட்டு தீப ஆராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோவிலின் நிர்வாகிகள் செய்திருந்தனர்.
அதே போல் வெள்ளகோவில் சோளீஸ்வரர் கோவில், கண்ணபுரம் விக்ரம சோளீஸ்வரர் கோவில், மயிலரங்கம் வைத்தியநாத சுவாமி கோவில், உத்தமபாளையம் காசி விஸ்வநாதர் கோவில், எல்.கே.சி.நகர் புற்றிடம் கொண்டீஸ்வரர் கோவில்களில் சிறப்பு பூஜை நடந்தது. பிரதோஷ விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் செய்திருந்தனர்
முத்தூர்
முத்தூர் பெரியநாச்சியம்மன் உடனமர் சோழீஸ்வரர் கோவில், செங்கோடம்பாளையம், சோமையநல்லூர் மங்கள கருணாம்பிகா உடனமர் கைலாயநாதர் கோவில், வள்ளியரச்சல் மாந்தீஸ்வரர் கோவில் மற்றும் நத்தக்காடையூர் பாலசவுந்திரவல்லி உடனமர் ஜெயங்கொண்டேஸ்வரர் கோவில்,மருதுறை பச்சை மரகதவள்ளி உடனமர் பட்டீஸ்வரர் கோவில் ஆகிய சிவன் கோவில்களில் ஆடி மாதபிரதோஷ சிறப்பு நடைபெற்றது.
கோவில்களில் உள்ள நந்தி எம் பெருமான் மற்றும் சிவன், பார்வதிக்கு பால், தயிர், இளநீர், பஞ்சாமிர்தம், திருமஞ்சனம் மூலம் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு, புதிய பட்டாடை உடுத்தப்பட்டு, சிறப்பு மலர் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை பூஜை நடைபெற்றது.
முடிவில் பக்தர்கள் அனைவருக்கும் பிரசாதங்கள், சர்க்கரை பொங்கல், சுண்டல், பஞ்சாமிர்தம், தக்காளி, தயிர் சாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.விழாவில் கிராம பொதுமக்கள் பலர் திரளாக கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சிவன் கோவில் பிரதோஷ மாத வழிபாட்டு குழுவினர் செய்திருந்தனர்.