வரலட்சுமி நோன்பையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பெண்கள் சாமி தரிசனம்


வரலட்சுமி நோன்பையொட்டிஅம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பெண்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 26 Aug 2023 12:30 AM IST (Updated: 26 Aug 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

வரலட்சுமி நோன்பையொட்டி தர்மபுரியில் உள்ள அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

வரலட்சுமி விரதம்

தர்மபுரியில் உள்ள அம்மன் கோவில்களில் வரலட்சுமி விரதத்தையொட்டி நேற்று அதிகாலை முதல் இரவு வரை பல்வேறு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதியைச் சேர்ந்த ஏராளமான பெண்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி கோட்டை கல்யாண காமாட்சியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

இதேபோல் தர்மபுரி குமாரசாமிப்பேட்டை ஸ்ரீ மாரியம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் செய்யப்பட்டு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். தர்மபுரி நெசவாளர் நகர் ஓம் சக்தி மாரியம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர். இதேபோல் தர்மபுரி கடைவீதி அம்பிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.

பச்சையம்மன் கோவில்

தர்மபுரி குமாரசாமிப்பேட்டை உழவர் தெரு மகா மாரியம்மன் கோவில், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில், பாரதிபுரம் மாரியம்மன் கோவில், அன்னசாகரம் சக்தி மாரியம்மன் கோவில், மதிகோன்பாளையம் மகாசக்தி மாரியம்மன் கோவில், வட்டார வளர்ச்சி காலனி முத்து மாரியம்மன் கோவில், கடைவீதி புதூர் மாரியம்மன் கோவில் உள்ளிட்ட அம்மன் கோவில்களிலும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

தர்மபுரி அரசு மருத்துவமனை எதிரில் உள்ள பச்சையம்மன் கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டாரத்தைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.

இதேபோல் ஒட்டப்பட்டி சக்தி பீடம் மாரியம்மன் கோவில், கொளகத்தூர் பச்சையம்மன் கோவில் உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் வரலட்சுமி விரதத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

அஷ்டவராகி அம்மன்

இதேபோல் இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர். காரிமங்கலம் அடுத்த கெரகோடஅள்ளியில் உள்ள அஷ்டவராகி அம்மன் கோவிலில் அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்கார சேவை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு சாமியை வழிபட்டனர். இதேபோல் ஒகேனக்கல் காவிரி அம்மன் கோவில் மற்றும் மாவட்டத்தில் உள்ள அனைத்து மாரியம்மன் கோவில்களிலும் வரலட்சுமி நோன்பையொட்டி சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. விழாவையொட்டி அந்தந்த கோவில்களில் பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

1 More update

Next Story