ஆவணி மாத அமாவாசையையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்


ஆவணி மாத அமாவாசையையொட்டிஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடுஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 15 Sept 2023 12:30 AM IST (Updated: 15 Sept 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

ஆவணி மாத அமாவாசையையொட்டி ஆஞ்சநேயர் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

அமாவாசை வழிபாடு

தர்மபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு அபிஷேகம், வழிபாடுகள் நடைபெற்றது. சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதில் அந்தந்த பகுதியை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தர்மபுரி எஸ்.வி, ரோடு ஸ்ரீ அபய ஆஞ்சநேய சாமி கோவிலில் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். தர்மபுரி ஹரிஹர நாத சுவாமி கோவில் தெருவில் உள்ள தாச ஆஞ்சநேயர் கோவிலில் நடைபெற்ற சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

வீர ஆஞ்சநேயர்

தர்மபுரி மாவட்டத்தில் பிரசித்தி பெற்ற வே.முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு பூஜை நடைபெற்றது. பின்னர் சாமிக்கு சிறப்பு அலங்கார சேவை, உபகார பூஜை மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் தர்மபுரி மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். மேலும் ரெயிலில் வந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஆஞ்சநேயரை வழிபட்டனர். அப்பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.

தொப்பூர் மன்றோ குளக்கரை ஆஞ்சநேயர் கோவிலிலும் ஆவணி மாத அமாவாசையையொட்டி சிறப்பு வழிபாடு நடைபெற்றது. சாமி சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதில் சேலம்- தர்மபுரி தேசிய நெடுஞ்சாலை வழியாக சென்ற ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். குப்புசெட்டிபட்டி விஸ்வரூப ஆஞ்சநேயர் கோவிலில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கெரகோடஅள்ளி ஆஞ்சநேயர் கோவில் உள்ளிட்ட மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆஞ்சநேயர் கோவில்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது.

1 More update

Next Story