காந்தமலை சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம்: 5,008 பக்தர்கள் பங்கேற்ற தீர்த்தக்குட ஊர்வலம்


காந்தமலை சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகம்: 5,008 பக்தர்கள் பங்கேற்ற தீர்த்தக்குட ஊர்வலம்
x
தினத்தந்தி 25 Oct 2023 7:00 PM GMT (Updated: 25 Oct 2023 7:01 PM GMT)

காந்தமலை சுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு 5,008 பக்தர்கள் பங்கேற்ற தீர்த்தக்குட ஊர்வலம் நடந்தது.

நாமக்கல்

மோகனூர்:

மோகனூர் காந்தமலை பாலசுப்பிரமணிய சாமி கோவில் கும்பாபிஷேக விழா நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு நேற்று தீர்த்தக்குடம் ஊர்வலம் நடைபெற்றது. மோகனூர் ஈஸ்வரன் கோவில் படிக்கட்டு துறை காவிரி ஆற்றுக்கு சென்ற 5,008 பக்தர்கள் புனிதநீராடி தீர்த்தக்குடம், பால் குடம் எடுத்து கொண்டு அரசு ஆரம்ப சுகாதார நிலையம், கடைவீதி, பஸ் நிலையம், நாமக்கல் சாலை வழியாக ஊர்வலமாக வந்து கோவிலை அடைந்தனர். முன்னதாக இந்த ஊர்வலத்தை நாமக்கல் எம்.எல்.ஏ.வும், விழாக்குழு தலைவருமான ராமலிங்கம் தொடங்கி வைத்தார். இதையடுத்து சாமிக்கு சிறப்பு அபிேஷகம் நடந்தது. இதில் அறங்காவலர் குழு தலைவர் நல்லுசாமி, உறுப்பினர்கள் செல்வசீராளன், மல்லிகா குழந்தைவேல், ரமா சீனிவாசன், ரமேஷ்பாபு, விழாக்குழு நிர்வாகிகள் நவலடி, வக்கீல் கைலாசம் மற்றும் நிர்வாகிகள், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஊர்வலத்தின்போது குதிரை, காளை மாடுகள் அணிவகுத்து சென்றன.. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story