நல்லம்பள்ளி அருகே அண்ணாமலையார்- பெருமாளப்பன் கோவில் கும்பாபிஷேக விழா


நல்லம்பள்ளி அருகே  அண்ணாமலையார்- பெருமாளப்பன் கோவில் கும்பாபிஷேக விழா
x

நல்லம்பள்ளி அருகே அண்ணாமலையார்- பெருமாளப்பன் கோவில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே பாலஜங்கமனஅள்ளி ஊராட்சி முனியன்கொட்டாய் கிராமத்தில் அண்ணாமலையார், பெருமாளப்பன் கோவில் கும்பாபிஷேக விழா கடந்த 27-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தீர்த்த குடம் மற்றும் முளைப்பாரிகை எடுத்தல், கணபதி, லட்சுமி, சரஸ்வதி மற்றும் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. விழாவின் முக்கிய நிகழ்வாக கும்பாபிஷேகம் நடந்தது. இதையடுத்து யாகசாலையில் இருந்து தீர்த்தகுடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு அண்ணாமலையார், பெருமாளப்பன் மற்றும் ரேணுகா பரமேஸ்வரி அம்மன் உள்ளிட்ட பாரிவார மூர்த்திகளுக்கு அர்ச்சகர்கள் புனிதநீரை ஊற்றி கும்பாபிஷேக விழாவை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சாமிக்கு அபிஷேகம், மகா தீபாராதனை நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டிபக்தர்களுக்கு அன்னதானம்வழங்கப்பட்டது.


Next Story