பரமத்திவேலூர் அருகே மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா.


பரமத்திவேலூர் அருகே  மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா.
x

பரமத்திவேலூர் அருகே மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி கோவில் திருவிழா.

நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே நன்செய் இடையாறு காவிரி கரையில் உள்ள மூங்கில் வனத்து சங்கிலி கருப்பண்ணசாமி, பொன்னாச்சியம்மன் கோவில் திருவிழா பூச்சாட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. பின்னர் பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்து ஊர்வலமாக கோயிலை வந்தடைந்தனர். இதனை தொடர்ந்து சாமிக்கு பச்சை பூஜை நடைபெற்றது. நேற்று முன்தினம் கிடா வெட்டுதல், பொங்கல் வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. பின்னர் சங்கிலி கருப்பண்ணசாமி, பொன்னாச்சியம்மன், வள்ளி தெய்வானை சமேத பாலமுருகன் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இதையடுத்து காப்பு அவிழ்த்தல் மற்றும் மஞ்சள் நீராடல் நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்களும் மற்றும் குடிபாட்டு மக்களும் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவிற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story