எருமப்பட்டி அருகே அச்சப்பன் கோவிலில் சாட்டையடி நிகழ்ச்சி
எருமப்பட்டி அருகே அச்சப்பன் கோவிலில் சாட்டையடி நிகழ்ச்சி
நாமக்கல்
எருமப்பட்டி:
எருமப்பட்டி அருகே பவித்திரம் ஊராட்சி வெள்ளாளப்பட்டி கிராமத்தில் அச்சப்பன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் விஜயதசமி அன்று சாட்டையடி நிகழ்ச்சி நடைபெறுவது வழக்கம். அதன்படி நேற்று மாலை சுமார் 3 மணி அளவில் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பூஜை நடந்தது. இதையடுத்து தப்பாட்டமும், கோவில் மைதானத்தில் பெண்களுக்கான சாட்டையடி நிகழ்ச்சியும் நடைபெற்றது. சுமார் 250-க்கும் மேற்பட்ட பெண்கள் சாட்டையடி நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
சாட்டையடி நிகழ்ச்சியில் பங்கேற்றால் பெண்களுக்கு பில்லிசூனியம் மற்றும் பேய் பிடித்திருந்தால் ஓடிவிடும் என்பது ஐதீகம். இதில் பவித்திரம், வெள்ளாளப்பட்டி, வரகூர் பவித்திரம் புதூர், கஸ்தூரிபட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Related Tags :
Next Story