உலகபாளையத்தில் மகா மாரியம்மன், ஓங்காளியம்மன் கோவில் திருவிழா

உலகபாளையத்தில் மகா மாரியம்மன், ஓங்காளியம்மன் கோவில் திருவிழா
நாமக்கல்
கந்தம்பாளையம்:
கந்தம்பாளையம் அருகே உலகபாளையத்தில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ மகா மாரியம்மன், ஓங்காளி அம்மன் கோவில் திருவிழா கடந்த 8-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. இதையடுத்து கும்பம் எடுத்து கோவிலை சுற்றி வந்து சாமிகளுக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன. காவிரியில் தீர்த்தம் எடுத்து வந்து சாமிகளுக்கு அபிஷேகம், மலர் அலங்காரம், தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து பெண்கள் மாவிளக்கு எடுத்து வந்து கோவிலை சுற்றி பொங்கல் வைத்து வழிபட்டனர். விழாவில் நேற்று முன்தினம் இரவு ஒயிலாட்டம், வானவேடிக்கை நடைபெற்றது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story






