நாமக்கல் மாவட்டத்தில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


நாமக்கல் மாவட்டத்தில்  முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி  திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 1 Nov 2022 12:15 AM IST (Updated: 1 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நாமக்கல் மாவட்டத்தில் முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி திரளான பக்தர்கள் சாமி தரிசனம்

நாமக்கல்

பரமத்திவேலூர்:

நாமக்கல் மாவட்டத்தில் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. திரளான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

பச்சைமலை முருகன்

பரமத்திவேலூர் தாலுகா கபிலர்மலை மற்றும் பாண்டமங்கலம் முருகன் கோவில்களில் நேற்று முன்தினம் சூரசம்ஹாரம், முருகப்பெருமான் முக்கிய வீதிகள் வழியாக உலா வரும் நிகழ்ச்சி நடந்தது. இந்த நிலையில் நேற்று பாண்டமங்கலம் புதிய காசி விஸ்வநாதர் கோவிலில் உள்ள சுப்ரமணியர் மற்றும் கபிலர்மலை‌ பாலசுப்ரமணியசுவாமி கோவில்களில் வள்ளி, தெய்வானை சமேத முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது.

இதேபோல் பொத்தனூர் பச்சைமலை முருகன், பேட்டை பகவதியம்மன் கோவிலில் உள்ள பாலமுருகன், சக்தி விநாயகர் கோவிலில் உள்ள முருகன், எல்லையம்மன் கோவிலில் உள்ள வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணியர், விஜயகிரி பழனியாண்டவர், கந்தம்பாளையம் அருகே அருணகிரிநாதர் மற்றும் பிராந்தகத்தில் உள்ள 34.5 அடி உயரமுள்ள ஆறுமுகக்கடவுள் உள்ளிட்ட கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மோகனூர், பள்ளிபாளையம்

மோகனூர் ஒன்றிய பகுதிகளில் உள்ள முருகன் கோவில்களில் திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. மோகனூர் காந்தமலை முருகன் கோவில், பாலப்பட்டி பாலசுப்ரமணியர் கோவில், பாலப்பட்டி அருகில் கதிர்மலை கந்தசாமி கோவில்களில் முருகனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது. இதில் அந்தந்த பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.

பள்ளிபாளையம் காவிரி கரையில் உள்ள ஸ்ரீ வள்ளி மணாளன் சுப்பிரமணியர் கோவிலில் நேற்று முன்தினம் சூரசம்ஹார நிகழ்ச்சி நடந்தது. நேற்று கோவிலில் திருக்கல்யாண நிகழ்ச்சி நடந்தது. ஏராளமான பக்தர்கள் திருக்கல்யாண நிகழ்ச்சியில் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் இரவு சாமி திருவீதி உலா நடந்தது.


Next Story