நல்லம்பள்ளி அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா


நல்லம்பள்ளி அருகே  முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 13 Nov 2022 12:15 AM IST (Updated: 13 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

நல்லம்பள்ளி அருகே முத்துமாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா

தர்மபுரி

நல்லம்பள்ளி:

நல்லம்பள்ளி அருகே கோபாலம்பட்டி கிராமத்தில் ஞான கணபதி, முத்துமாரியம்மன் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த பல லட்சம் ரூபாய் மதிப்பில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து கும்பாபிஷேக விழா கடந்த 30-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கணபதி, லட்சுமி, சரஸ்வதி, யாகசாலை பூஜைகள், வாஸ்து பூஜை, தீர்த்தக்குட ஊர்வலம் நடைபெற்றது. பின்னர் மூலவர் பிரதிஷ்டை செய்து, அஷ்டபந்தனம் சாற்றும் நிகழ்ச்சி நடந்தது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக யாகசாலையில் இருந்து மேளதாளங்கள் முழங்க தீர்த்தக்குடங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. பின்னர் புரோகிதர்கள் ஞானகணபதி, முத்துமாரியம்மன், கோபுர கலசங்கள் மற்றும் பரிவார தெய்வங்கள், மூலவருக்கு புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். பின்னர் சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்கார சேவை, மகா தீபாராதனை நடைபெற்றது. விழாவில் கோபாலம்பட்டி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.


Next Story