அரூர் அருகே திரியம்பகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா


அரூர் அருகே   திரியம்பகேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா
x
தினத்தந்தி 21 Nov 2022 6:45 PM GMT (Updated: 21 Nov 2022 6:45 PM GMT)
தர்மபுரி

அரூர்:

அரூர் அருகே பிரசித்தி பெற்ற பெத்தூர் ஸ்ரீ லட்சுமண நாராயண கோவில் வளாகத்தில் உள்ள திரிபுரசுந்தரி உடனமர் திரியம்பகேஸ்வரர் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் தொடங்கி நடந்து முடிந்தது. இதையடுத்து கும்பாபிேஷக விழா சிறப்பு பூஜையுடன் தொடங்கியது. கார்த்திகை, ரோகிணி, சந்திரன் உள்ளிட்டோருக்கு சிறப்பு பூஜை செய்து, முளைப்பாரிகள் எடுத்து வரப்பட்டது.

இதனைத் தொடர்ந்து சாமிகளுக்கு காப்பு அணிவிக்கப்பட்டு குடங்கள் புறப்பாடும், கோவில் கோபுரத்தில் உள்ள சிவலிங்கத்திற்கு சிறப்பு பூஜை செய்து தீர்த்தங்கள் ஊற்றப்பட்டது. விழாவில் முன்னாள் அமைச்சர் பி. பழனியப்பன் உள்பட சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதனை தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. போலீசார் பாதுகாப்பு பணியை செய்தனர்.


Next Story