ஆவாரங்காடு சனிசந்தை முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா தங்கமணி எம்.எல்.ஏ. பங்கேற்பு


ஆவாரங்காடு சனிசந்தை   முனியப்பன் கோவில் கும்பாபிஷேக விழா  தங்கமணி எம்.எல்.ஏ. பங்கேற்பு
x
தினத்தந்தி 3 Dec 2022 12:15 AM IST (Updated: 3 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பள்ளிபாளையம்:

பள்ளிபாளையம் அருகே ஆவாரங்காடு சனிசந்தை பகுதியில் உள்ள சக்தி விநாயகர், சடா முனியப்பன் மற்றும் வேப்பிலை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி தினந்தோறும் சாமிகளுக்கு பல்வேறு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. இந்த விழாவில் முன்னாள் அமைச்சர் தங்கமணி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார். முன்னதாக அவருக்கு கோவில் நிர்வாகத்தினர் சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினர். தொடர்ந்து நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில் பள்ளிபாளையம் முன்னாள் நகராட்சி தலைவர் வெள்ளிங்கிரி, முன்னாள் துணைத்தலைவர் சுப்பிரமணி, அ.தி.மு.க. கவுன்சிலர்கள் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. தொடர்ந்து கும்பாபிஷேக விழாவிற்கு தங்கமணி எம்.எல்.ஏ. நன்கொடை அளித்தார்.


Next Story