பாலக்கோட்டில் வேணுகோபால் அய்யப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜை


பாலக்கோட்டில் வேணுகோபால் அய்யப்பசாமி கோவிலில் சிறப்பு பூஜை
x
தினத்தந்தி 15 Dec 2022 6:45 PM GMT (Updated: 15 Dec 2022 6:46 PM GMT)
தர்மபுரி

பாலக்கோடு:

பாலக்கோடு மற்றும் அதனை சுற்றியுள்ள ஜெர்ந்தலாவ், சித்திரப்பட்டி, வேளாவள்ளி, மூங்கப்பட்டி, கடமடை, மாக்கன்கொட்டாய், சோமனஅள்ளி, தளவாய்அள்ளி புதூர், வாழைத்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களை சேர்ந்த பக்தர்கள் சபரிமலை அய்யப்பசாமி கோவிலுக்கு மாலை அணிந்து, விரதம் இருந்து வருகிறார்கள். மேலும் பாலக்கோட்டில் உள்ள வேணுகோபால் அய்யப்ப சாமி கோவிலில் தினமும் பஜனை மற்றும் சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்தநிலையில் நேற்று முன்தினம் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது. இதையொட்டி 18 படிகளில் தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. இதில் அய்யப்ப பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story