வெங்கரையம்மன் கோவிலில் படி பூஜை விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


வெங்கரையம்மன் கோவிலில் படி பூஜை விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 10 Jan 2023 12:15 AM IST (Updated: 10 Jan 2023 12:17 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

பரமத்திவேலூர்:

பரமத்திவேலூர் அருகே வெங்கரையில் பிரசித்தி பெற்ற வெங்கரையம்மன், ரெங்கையன், அல்லாளி, தொட்டியத்தான் கோவிலில் மார்கழி மாத படி பூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி நேற்று முன்தினம் அதிகாலை கோவில் வளாகத்தில் பொங்கல் வைத்தல், கிடா வெட்டுதல் நடைபெற்றது. இதையடுத்து பக்தர்கள் காவிரி ஆற்றுக்கு சென்று புனித நீராடி தீர்த்த குடங்களுடன் ஊர்வலமாக கோவிலை வந்தடைந்தனர்.

இதனை தொடர்ந்து வெங்கரை அம்மன், ரெங்கையன், அல்லாளி, தொட்டியத்தான் உள்ளிட்ட சாமிகளுக்கு 18 வகையான வாசனை பொருட்களால் சிறப்பு அபிஷேகம், சிறப்பு அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.

பின்னர் இடும்பை அல்லாள இளைய நாயக்கர் சோமசுந்தர பட்டக்காரருக்கு பரிவட்டம் கட்டி முதல் மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். ஏற்பாடுகளை வெங்கரையம்மன் கோவில் மூல குல குடிப்பாட்டு மக்கள் செய்திருந்தனர்.


Next Story