நாமக்கல் சந்தைப்பேட்டைசெல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்


நாமக்கல் சந்தைப்பேட்டைசெல்வவிநாயகர் கோவில் கும்பாபிஷேக விழாதிரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 28 Jan 2023 12:15 AM IST (Updated: 28 Jan 2023 12:15 AM IST)
t-max-icont-min-icon
நாமக்கல்

நாமக்கல் சந்தைப்பேட்டை புதூரில் உள்ள செல்வவிநாயகர், தட்சிணாமூர்த்தி, பாலமுருகன், விஷ்ணு துர்க்கை அம்மன், நவக்கிரகங்கள் கோவில்களின் மகா கும்பாபிஷேக விழா நேற்று நடைபெற்றது.

விழாவில் விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி ஹோமம், கோ பூஜை, தீபாராதனை, வாஸ்து சாந்தி ஹோமம், தீபாராதனை, காவிரி ஆற்றுக்கு தீர்த்தம் எடுக்க செல்லுதல், கும்பலங்காரம், கலசாபிஷேகம், கும்பங்கள் யாகசாலைக்கு அழைத்து வருதல் நடந்தது.

இதையடுத்து 2-ம் கால யாக பூஜை, கோபுர பூஜை, நிர்மானம் செய்தல், புதிய பிம்பங்கள், மூலஸ்தான சாமிகளுக்கு அஷ்டபந்தன மருந்து சாத்துதல், 2-ம் கால தீபாராதனை, 3-ம் கால யாகபூஜை நடந்தது.

விழாவில் நேற்று காலை 5 மணிக்கு 4-ம் கால யாகபூஜை, காலை 7 மணிக்கு தீபாராதனை, காலை 8 மணிக்கு செல்வ விநாயகர், தட்சிணாமூர்த்தி, விஷ்ணு துர்க்ைக அம்மன், பாலமுருகன், நவக்கிரகங்களுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. சிவாச்சாரியார்கள் கலசத்தில் புனிதநீர் ஊற்றி கும்பாபிஷேகத்தை நடத்தினர். இதில் அப்பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதையடுத்து பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story