பாப்பாரப்பட்டி புதிய சுப்பிரமணிய சுவாமி கோவிலில்விநாயகர் தேரோட்டம்பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்


பாப்பாரப்பட்டி புதிய சுப்பிரமணிய சுவாமி கோவிலில்விநாயகர் தேரோட்டம்பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 5 Feb 2023 6:45 PM GMT (Updated: 5 Feb 2023 6:46 PM GMT)
தர்மபுரி

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டி புதிய சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் தைப்பூச தேர்த்திருவிழா கடந்த 31-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து சாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, சிறப்பு பூஜை நடைபெற்றன. தினசரி இரவு சாமி ஆட்டுக்கடா, குதிரை, சிம்ம வாகனம், பூத வாகனம் ஆகியவற்றில் திருவீதி உலா வந்தார்.

நேற்று முன்தினம் காலை பக்தர்கள் காவடிகளுடன் குண்டம் இறங்கி தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர். மாலை சாமி திருக்கல்யாணமும், இரவு சாமி மயில்வாகனத்தில் திருவீதி உலாவும் நடைபெற்றது.

இந்த நிலையில் நேற்று மாலை விநாயகர் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளினார். இரவு சுப்பிரமணிய சாமி யானை வாகனத்தில் வீதி உலா வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து நிலை சேர்த்தனர். விநாயகர் தேரோட்டத்தையொட்டி ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

விழாவில் இன்று (திங்கட்கிழமை) முருகப்பெருமான் மகாரதம் நிலை பெயர்தலும், நாளை (செவ்வாய்க்கிழமை) விழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை பரம்பரை அறங்காவலர் ஞானசேகரன் மற்றும் விழாக்குழுவினர் செய்துவருகின்றனர்.


Next Story