ஓசூர் அருகே கர்நாடக எல்லையில்மத்தூரம்மா கோவில் தேரோட்டம்மாடுகள் இழுத்து சென்றன


ஓசூர் அருகே கர்நாடக எல்லையில்மத்தூரம்மா கோவில் தேரோட்டம்மாடுகள் இழுத்து சென்றன
x
தினத்தந்தி 20 March 2023 7:00 PM GMT (Updated: 20 March 2023 7:01 PM GMT)
கிருஷ்ணகிரி

ஓசூர்:

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே கர்நாடக எல்லைப்பகுதியில் உஸ்கூர் என்ற கிராமம் உள்ளது. இங்கு பழமைவாய்ந்த ஸ்ரீ மத்தூரம்மா என்ற அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் தேர்த்திருவிழா 3 நாட்கள் நடந்தன. முதல் நாள் நிகழ்ச்சியாக மா விளக்கு ஊர்வலம், பூஜை, நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று முன்தினம் 100 அடி உயர அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மனை வைத்து மேளதாளம் முழங்க கிராம வீதிகளில் தேர் இழுத்து செல்லப்பட்டது. இந்த தேரை மாடுகள் இழுத்து செல்வது ஆண்டுதோறும் நடைபெறும் சிறப்பம்சமாகும். விழாவில் ஓசூர், அத்திப்பள்ளி, ஆனேக்கல், எலக்ட்ரானிக் சிட்டி மற்றும் சுற்று வட்டாரங்களில் இருந்து திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவையொட்டி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.


Next Story