மாதுப்பட்டியில்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


மாதுப்பட்டியில்காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம்திரளான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 7 May 2023 12:30 AM IST (Updated: 7 May 2023 12:30 AM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி அருகே பெரிய குரும்பட்டி அடுத்த மாதுப்பட்டியில் உள்ள காளியம்மன் கோவில் சித்திரை தேர்த்திருவிழா கடந்த 2-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து கூழ் ஊற்றுதல், அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், வழிபாடு நடைபெற்றது. பின்னர் மாவிளக்கு ஊர்வலம் நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து காளியம்மனுக்கு திருக்கல்யாண உற்சவமும், விநாயகர் தேரோட்டமும் நடைபெற்றது.

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான காளியம்மன் கோவில் சித்திரை தேரோட்டம் நேற்று நடைபெற்றது. விழாவையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடைபெற்றது. பின்னர் அலங்கரிக்கப்பட்ட தேரில் ஸ்ரீ காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார். தொடர்ந்து பல்வேறு பூஜைகளுடன் தேரோட்டம் நடைபெற்றது. இதில் முக்கிய பிரமுகர்கள், பொதுமக்கள் மற்றும் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வடம்பிடித்து தேரை இழுத்தனர்.

விழாவில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பந்தகாசி விழாவும், கங்கை பூஜையும், மேல்நாய்க்கம்பட்டி அண்ணாமலை கவுண்டர் தோட்டத்தில் அம்மனுக்கு சிறப்பு பூஜைகள், சாமி ஊர்வலம் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை விழாக்குழுவினர் மற்றும் ஊர் பொதுமக்கள் செய்து வருகின்றனர். விழாவையொட்டி தர்மபுரி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு செந்தில்குமார், டவுன் இன்ஸ்பெக்டர் ரங்கசாமி மற்றும் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story