பாப்பிரெட்டிப்பட்டியில் மாரியம்மன், சென்றாய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா


பாப்பிரெட்டிப்பட்டியில் மாரியம்மன், சென்றாய பெருமாள் கோவில் தேர்த்திருவிழா
x
தினத்தந்தி 1 Jun 2023 7:00 PM GMT (Updated: 3 Jun 2023 2:50 AM GMT)
தர்மபுரி

பாப்பிரெட்டிப்பட்டி:

பாப்பிரெட்டிப்பட்டியில் உள்ள மாரியம்மன் மற்றும் சென்றாய பெருமாள் கோவில் திருவிழா கடந்த 23-ந் தேதி பூச்சாட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து அபிஷேக ஆராதனை, கணபதி ஹோமம், அம்மனுக்கு கொலு வைத்தல் நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து எல்லை பன்றி குத்துதல், இரவு காளியம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றது. அம்மனுக்கு திருக்கல்யாணம், சக்தி அழைத்தல், பூமிதி விழா, மாவிளக்கு எடுத்தல் நடந்தது.

நேற்று முன்தினம் அலகுகுத்துதல், உருளுதண்டம் வருதல், பொங்கல் வைத்தல் நிகழ்ச்சி நடைபெற்றது. நேற்று மாலை பக்தர்கள் பல்வேறு அம்மன் வேடங்களுடன் தேரோட்டம் நடந்தது. இந்த தேரோட்டத்தை பேரூராட்சி தலைவர் செங்கல் மாரி வடம்பிடித்து இழுத்து தொடங்கி வைத்தார். தேர் பாப்பிரெட்டிப்பட்டி கடைவீதி, 4 ரோடு, பிள்ளையார் கோவில் தெரு உள்ளிட்ட முக்கிய வீதிகள் வழியாக சென்று கோவிலை வந்தடைந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர். விழா ஏற்பாடுகளை செயல் அலுவலர் பிரபு, ஆய்வாளர் மணிகண்டன், ஊர் பொதுமக்கள், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.


Next Story