சீராம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்


சீராம்பட்டி கிராமத்தில் காளியம்மன் கோவில் தேரோட்டம்: ஏராளமான பக்தர்கள் வடம்பிடித்து இழுத்தனர்
x
தினத்தந்தி 30 Jun 2023 12:30 AM IST (Updated: 30 Jun 2023 1:33 PM IST)
t-max-icont-min-icon
தர்மபுரி

தர்மபுரி அருகே ஆண்டிஅள்ளி ஊராட்சிக்குட்பட்ட சீராம்பட்டி கிராமத்தில் ஸ்ரீ காளியம்மன் கோவில் தேர்த்திருவிழா மற்றும் 16 கிராம ஊர் நோன்பு விழா கடந்த 26-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைத்தொடர்ந்து மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் மற்றும் மாவிளக்கு எடுக்கும் விழா நடைபெற்றது. பின்னர் மண்டு மாரியம்மனுக்கு மாவிளக்கு விழாவும், கரக திருவிழாவும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நாளான நேற்று காளியம்மன் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. விழாவை முன்னிட்டு அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை மற்றும் வழிபாடுகள் நடைபெற்றது. விழாவில் ஏராளமான பக்தர்கள் ஆடு, கோழிகள் பலியிட்டும், பொங்கல் வைத்தும் நேர்த்திக் கடன் செலுத்தினர். இதைத்தொடர்ந்து காளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் தேரில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தார். பின்னர் சிறப்பு வழிபாடுகள் மற்றும் மகா தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக நடைபெற்ற இந்த தேரோட்டத்தில் சுற்றுவட்டாரத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Next Story