கோவில் உள்பட 7 கூரை வீடுகள் எரிந்து நாசம்


கோவில் உள்பட 7 கூரை வீடுகள் எரிந்து நாசம்
x

கீழ்வேளூர் அருகே நடந்த தீ விபத்தில் கோவில் உள்பட 7 கூரை வீடுகள் எரிந்து நாசமடைந்தன. தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. 7 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன.

நாகப்பட்டினம்

சிக்கல்;

கீழ்வேளூர் அருகே நடந்த தீ விபத்தில் கோவில் உள்பட 7 கூரை வீடுகள் எரிந்து நாசமடைந்தன. தீ விபத்தில் ரூ.10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமடைந்தன. 7 ஆடுகளும் தீயில் கருகி உயிரிழந்தன.

தீ விபத்து

‌நாகை மாவட்டம் கீழ்வேளூர் அருகே உள்ள திருக்கண்ணங்குடி ஊராட்சி சின்ன முக்கால் வட்டம் பகுதியில் உள்ள ஒரு வயலில் காய்ந்த புல் செடிகளில் திடீரென தீப்பிடித்தது. அப்போது காற்று பலமாக வீசியதால் இந்த தீ அருகே உள்ள மணியன் என்பவரது கூரை வீட்டின் மேல் பரவி வீடு தீப்பிடித்து எரிய தொடங்கியது.இ்ந்த தீ மள, மளவென அருகிலிருந்த ராஜ்குமார்(36), செந்தில்குமார்(40), மற்றொரு ராஜ்குமார்(30), ரவி(40), அஞ்சான்(65), அய்யப்பன் (32) ஆகியோரின் கூரை வீடுகளுக்கும் பரவியது. மேலும் அருகே உள்ள குளிர்ந்த மாரியம்மன் கோவிலிலும் தீப்பிடித்தது.

கோவில்-7 கூரை வீடுகள் எரிந்து நாசம்

தகவல் அறிந்து அந்த பகுதியில் உள்ளவர்கள் சம்பவ இடத்துக்கு திரண்டு வந்து தீயை அணைக்க முயன்றனர்.இருப்பினும் 7 கூரை வீடுகள் கோவில் மற்றும் வீடுகளில் இருந்த துணிகள், வீட்டு உபயோக பொருட்கள், பீரோ, கட்டில் ஆகியவை எரிந்து நாசமானது.

7 ஆடுகள் சாவு

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு வந்த தீயணைப்பு வீரர்கள் அருகே உள்ள வீடுகளுக்கு மேலும் தீ பரவாமல் தடுத்து நிறுத்தினர். தீ விபத்தில் வீடுகளில் இருந்த ரூ. 10 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமடைந்தன. மேலும் வீடுகளில் வளர்க்கப்பட்ட 7 ஆடுகளும் உடல் கருகி உயிாிழந்தன.தீ விபத்து குறித்து தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அலுவலர் ஷகிலா நாகை மாலி எம்.எல்.ஏ., தாசில்தார் ரமேஷ்குமார், ஊராட்சி தலைவர் செல்வமணி ஆகியோர் தீ விபத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினர்.மேலும் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அரசு சார்பில் வழங்கப்படும் நிவாரண பொருட்கள் மற்றும் ரூ. 5 ஆயிரம் வழங்கினர்.இது குறித்து கீழ்வேளூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story