கம்ப காமாட்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா


கம்ப காமாட்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா
x

கம்ப காமாட்சி அம்மன் கோவிலில் தீமிதி திருவிழா நடந்தது.

மயிலாடுதுறை

திருவெண்காடு அருகே கீழ சட்டநாதபுரம் கிராமத்தில் கம்ப காமாட்சி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டு திருவிழா காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. அதைத்தொடர்ந்து ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு வழிபாடும், வீதி உலா காட்சியும் நடந்தது. இதையடுத்து தீமிதி திருவிழா நடந்தது. இதனையொட்டி பக்தர்கள் பால்காவடி, பன்னீர் காவடி, அலகு காவடி எடுத்து கோவிலுக்கு ஊர்வலமாக வந்தும், கோவிலின் முன்புறம் அமைக்கப்பட்ட தீக்குண்டத்தில் இறங்கியும் தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் திரளான பெண் பக்தர்கள் மாவிளக்கு ஏற்றி வழிபட்டனர். விழாவையொட்டி கம்ப காமாட்சி அம்மன், காத்தவராயன் சாமி வீதி உலா நடந்தது. விழா ஏற்பாடுகளை கிராம மக்கள் செய்து இருந்தனர்.


Next Story