முத்துமாரியம்மன் கோவில் திருவிழா


முத்துமாரியம்மன் கோவில் திருவிழா
x

பட்டுக்கோட்டை அருகே கோட்டாகுடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

தஞ்சாவூர்

பட்டுக்கோட்டை அருகே கோட்டாகுடி முத்துமாரியம்மன் கோவில் திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

கோட்டாகுடி முத்துமாரியம்மன் கோவில்

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே கோட்டாகுடியில் பிரசித்திப்பெற்ற முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான சித்திரை திருவிழா நாளை (திங்கட்கிழமை) நடக்கிறது.

விழாவை முன்னிட்டு சாமிக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடக்கின்றன. அதைத்தொடர்ந்து சிறப்பு ஆராதனைகள் நடைபெற உள்ளன. பின்னர் சாமி வரவழைப்பு நிகழ்ச்சி விமரிசையாக நடக்கிறது. தொடர்ந்து பால்குடம், பால்காவடி எடுத்து வரும் நிகழ்ச்சியும், இரவு எலக்ட்ரிக் காவடி எடுத்து வரும் நிகழ்ச்சியும் நடைபெற உள்ளது. இதில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட காவடியை பக்தர்கள் எடுத்து உர உள்ளனர்.

வீதி உலா- அன்னதானம்

அதேபோல சிறப்பு அலங்காரத்துடன் சாமி வீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது. விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படுகிறது. இரவு வாண வேடிக்கையுடன் அம்மனுக்கு பதுமை பூ போடும் நிகழ்ச்சி நடக்கிறது. அப்போது செண்டை மேளத்துடன் சாமி வீதி உலா நடைபெறும்.

2-ந் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 8 மணி அளவில் நகைச்சுவை இன்னிசை பட்டிமன்றம் குடும்ப மகிழ்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் பெரிதும் தேவை ஆண்களின் உழைப்பா? பெண்களின் பொறுப்பா? என்ற தலைப்பில் நடக்கிறது. இதற்கு நடுவராக தொலைக்காட்சி புகழ் பட்டுக்கோட்டை கோவி.ராஜேந்திரன் பங்கேற்கிறார். இதில் கவிஞர்கள் நீலகண்டன், ராமநாதன், பேராசிரியர் வளர்மதி, ஜோதி சுந்தரேசன் ஆகியோர் கலந்து கொண்டு பேசுகிறார்கள். அதேபோல 3-ந் தேதி இரவு 8 மணி அளவில் இன்னிசை கச்சேரி நடக்கிறது. விழாவில் பக்தர்கள் திரளாக கலந்து கொள்ள வேண்டும் என கோட்டாகுடி கிராம மக்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


Next Story