வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு

வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு வழிபாடு நடந்தது.
திருவாரூர்
நீடாமங்கலம் வீர ஆஞ்சநேயர் கோவிலில் நேற்று சிறப்பு வழிபாடு நடைபெற்றது. இதனைமுன்னிட்டு வீர ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது.இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதேபோல் நீடாமங்கலம் சந்தானராமர் கோவிலில் சீதா, லெட்சுமண, அனுமன் சமேத சந்தானராமர், விஸ்வக்சேனர், ஆஞ்சநேயர் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு அபிஷேக, ஆராதனைகள், அலங்காரம் செய்யப்பட்டு மகாதீபாராதனை காட்டப்பட்டது. திருவோணமங்கலம் ஞானபுரியில் எழுந்தருளியுள்ள சங்கடஹர மங்கலமாருதி ஆஞ்சநேயர் கோவில், ஆலங்குடி அபயவரதராஜப் பெருமாள் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் சிறப்பு வழிபாடு நடந்தது.
Related Tags :
Next Story