ஹயகிரீவர் ஜெயந்தி விழா


ஹயகிரீவர் ஜெயந்தி விழா
x
தினத்தந்தி 29 Aug 2023 6:45 PM GMT (Updated: 29 Aug 2023 6:46 PM GMT)

ஹயகிரீவர் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது.

திருவாரூர்

வைணவத்தில் கல்வி கடவுளாக வழிபடப்படும் ஹயகிரீவர் ஜெயந்தி விழா வடுவூர் கோதண்டராமசாமி கோவிலில் கொண்டாடப்பட்டது. ஆவணி மாதம் திருவோண நட்சத்திரத்தையொட்டி நடந்த இந்த விழாவில் லட்சுமியுடன் அமர்ந்த திருக்கோலத்தில் அருள்பாலித்து வரும் ஹயகிரீவருக்கு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் தேரில் எழுந்தருளச்செய்து வீதியுலா நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story