குறிக்கார கருப்பண்ணசாமி கோவில் திருவிழா


குறிக்கார கருப்பண்ணசாமி கோவில் திருவிழா
x

சுப்பிரமணியபுரத்தில் குறிக்கார கருப்பண்ணசாமி கோவில் திருவிழா நடைபெற்றது.

நாமக்கல்

மோகனூர்

மோகனூர் சுப்பிரமணியபுரத்தில் குறிக்கார கருப்பண்ணசாமி கோவில் உள்ளது. நேற்று முன்தினம் இரவு வேல் எடுத்து இந்த கோவில் திருவிழா தொடங்கியது. அதைத்தொடர்ந்து நேற்று மோகனூர் காவிரி ஆற்றில் இருந்து பக்தர்கள் யானை, குதிரை, பசுமாடு சாரட் வண்டியில் ஊர்வலமாக பால், தீர்த்தக்குடம் எடுத்து வந்தனர். பின்னர் சாமிக்கு பால் தீர்த்தக்குட அபிஷேகம் நடைபெற்றது. தொடர்ந்து பல்வேறு சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து விசேஷ பூஜை நடைபெற்றது. இதையடுத்து இன்று (செவ்வாய்க்கிழமை) காலை பொங்கல் வைத்தல், மாவிளக்கு, கிடாவெட்டும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. பின்னர் சாமி வீதி உலாவும் நடைபெறும். நாளை (புதன்கிழமை) மஞ்சள் நீராட்டு விழா நடைபெற உள்ளது. திருவிழாவையொட்டி தினசரி இரவு கலை நிகழ்ச்சிகளும் நடைபெற்று வருகின்றது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகிகளும், பக்தர்களும் செய்து வருகின்றனர்கள்.


Next Story