கருப்பசாமி கோவில் திருவிழா


கருப்பசாமி கோவில் திருவிழா
x

ராசிபுரம் அருகே கருப்பசாமி கோவில் திருவிழாவில் 1 டன் அரிவாள்கள் காணிக்கை செலுத்தப்பட்டது.

நாமக்கல்

ராசிபுரம்

ராசிபுரம் அருகே பட்டணம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற பள்ளத்து கருப்பசாமி கோவில் உள்ளது. இந்த கோவில் திருவிழா 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம். கொரோனா தொற்று காரணமாக 2 ஆண்டுகள் திருவிழா நடைபெறவில்லை. இந்த ஆண்டு திருவிழா நேற்று முன்தினம் இரவு நடந்தது. இதில் பட்டணம், வடுகம், ஆத்தூர், சின்னசேலம், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், அரியலூர், பெரம்பலூர் உள்பட பல்வேறு மாவட்டங்களைச் சேர்ந்த திரளானவர்கள் குடும்பத்துடன் வந்திருந்து கருப்பசாமியை வழிபட்டு சென்றனர். விழாவில் இரவு 10 மணி, 12 மணி, 3 மணி என 3 முறை கருப்பசாமிக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. மலர்களால் சாமிக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து பக்தர்கள் பொங்கல் வைத்தனர். இதையடுத்து பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு நேர்த்திக்கடன் செலுத்தினர். மேலும் திருவிழாவையொட்டி பட்டணத்தைச் சேர்ந்த பக்தர் ஒருவர் நேர்த்திக்கடனாக 1 டன் எடை உள்ள 2 ராட்சத அரிவாள்களை வழங்கினார். பின்னர் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர், ஊர்பொதுமக்கள் செய்திருந்தனர்.


Next Story