காமாட்சி அம்மன் கோவில் திருவிழா
அரூரில் காமாட்சி அம்மன் கோவில் திருவிழாவில் பெண்கள் தீமிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
தர்மபுரி
அரூர்
அரூரில் காமாட்சியம்மன், கோட்டை காளியம்மன், உள்ளூர் மாரியம்மன் ஆகிய கோவில் திருவிழா நடைபெற்றது. விழாவையொட்டி கொடியேற்றம், கங்கனம் கட்டுதல், உள்ளூர் மாரியம்மனுக்கு கூழ் ஊற்றுதல் ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. தொடர்ந்து உள்ளூர் மாரியம்மன், மேட்டுப்பட்டி மாரியம்மன், கோட்டை காளியம்மன் ஆகிய சாமிகளுக்கு அலங்காரம், மாவிளக்கு ஊர்வலம் நடந்தது. பின்னர் கோட்டை காளியம்மன் கோவிலில் பெண்கள் 108 தீப்பந்தங்களுடன் சாமிகள் மிதித்தும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
Related Tags :
Next Story