மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்த ஆகாச மாரியம்மன்


மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்த ஆகாச மாரியம்மன்
x
தினத்தந்தி 2 Jun 2023 1:00 AM IST (Updated: 2 Jun 2023 12:27 PM IST)
t-max-icont-min-icon

நாச்சியார்கோவிலில் திருவிழாவையொட்டி ஆகாச மாரியம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

தஞ்சாவூர்

நாச்சியார்கோவிலில் திருவிழாவையொட்டி ஆகாச மாரியம்மன் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் அருள்பாலித்தார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை தரிசனம் செய்தனர்.

ஆகாச மாரியம்மன் கோவில்

தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் பிரசித்திப்பெற்ற ஆகாச மாரியம்மன் கோவில் உள்ளது. இங்கு அம்மனுக்கென்று தனிச்சன்னதி கிடையாது. ஆண்டு முழுவதும் அகல் விளக்கு தீப வடிவில் அம்மன் காட்சி தருவதாக ஐதீகம். இங்கு ஆண்டுதோறும் வைகாசி மாதத்தில் 13 நாட்கள் திருவிழா விமரிசையாக நடைபெறும்.

அதன்படி இந்த ஆண்டு திருவிழாவை முன்னிட்டு கடந்த மாதம் (மே) 26-ந் தேதி (வெள்ளிக்கிழமை) இரவு சமயபுரத்திலிருந்து அம்மன் கோவிலுக்கு புஷ்ப பல்லக்கில் எழுந்தருளுதல் நிகழ்ச்சி நடைபெற்றது. தொடர்ந்து 27-ந் தேதி வீற்றிருந்த திருக்கோலத்திலும், 28-ந் தேதி தஞ்சாவூர் மகாராஜாவால் விருது அளிக்கப்பட்ட லட்சுமி அலங்காரத்திலும், 29-ந் தேதி சரஸ்வதி அலங்காரத்திலும் அம்மன் அருள்பாலித்தார்.

மகிஷாசுரமர்த்தினி அலங்காரம்

30-ந் தேதி மதன கோபால அலங்காரத்திலும் அருள்பாலித்தார். நேற்று முன்தினம் மகிஷாசுரமர்த்தினி அலங்காரத்தில் ஆகாசமாரியம்மன் அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதை முன்னிட்டு நேற்று முன்தினம் காலை முதலே பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தந்த பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபட்டனர். விழாவின் 9-ம் நாள் நிகழ்ச்சியாக வருகிற 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) பெரிய திருவிழா நடக்கிறது. இதையொட்டி பக்தர்கள் காவடி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்துகிறார்கள்.

7-ந் தேதி இரவு தேரில் அம்மன் சமயபுரத்துக்கு எழுந்தருள்கிறார். அப்போது நின்ற திருக்கோலத்தில் வெள்ளிக்குடம் சுமந்தவாறு சமயபுரம் புறப்படுகிறார். 16-ந் தேதி இரவு 10 மணிக்கு விடையாற்றி விழா நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அறங்காவலர் துரை. சீனிவாசன், அறங்காவலர்கள் டாக்டர். கோபாலகிருஷ்ணன், ராஜு மற்றும் புராதன கவரையர்கள் செய்து வருகின்றனர்.

1 More update

Next Story