வைரம்பட்டியில் கோவில் திருவிழா


வைரம்பட்டியில் கோவில் திருவிழா
x

வைரம்பட்டியில் கோவில் திருவிழா நடந்தது.

திருச்சி

வையம்பட்டி:

மணப்பாறையை அடுத்த வையம்பட்டி அருகே உள்ள வைரம்பட்டியில் மாரியம்மன், காளியம்மன், கோட்டைக்கரை முனியப்பன், விநாயகர், தேக்கமலையான், பாலதண்டாயுதபாணி உள்ளிட்ட தெய்வங்கள் எழுந்தருளிய கோவில் உள்ளது. இந்த கோவிலில் சுமார் 6 ஆண்டுகளுக்கு பின் நேற்று திருவிழா நடைபெற்றது. இதையொட்டி சுற்றுப் பொங்கல் திருவிழாவின் தொடக்கமாக கரகமரத்தில் இருந்து ஒரே சீருடை போல் ஒரே நிறத்திலான சேலையை அணிந்திருந்த பெண்கள் பொங்கல் கூடையை தலையில் சுமந்து தாரை, தப்பட்டை முழங்க ஊர்வலமாக கோவில் நோக்கி வந்தனர். அப்போது ஆண்களும் ஒரே நிறத்திலான சட்டை அணிந்து ஆட்டம், பாட்டத்துடன் முன்னே சென்றனர். கோவிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றதை தொடர்ந்து கிராம மக்கள் கோவில் முன் அம்மனுக்கு பொங்கல் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். இதை தொடர்ந்து முனியப்பன் கோவிலுக்கு சிறப்பு பூஜை மற்றும் கிடா வெட்டுதல் நடைபெற்றது. மாலையில் காளியம்மனுக்கு சிறப்பு பூஜை, கிடா வெட்டுதல் நிகழ்ச்சி நடைபெற்றது.


Next Story