ஆல்கொண்டமால் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு


ஆல்கொண்டமால் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு
x

சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து விமானம் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.

திருப்பூர்

சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலில் கும்பாபிஷேகம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டதை தொடர்ந்து விமானம் பாலாலயம் நிகழ்ச்சி நடந்தது.

ஆல்கொண்டமால்

உடுமலை அருகே சோமவாரப்பட்டியில் ஆதி காலத்தில் அடர்ந்த காடுகளில் விஷப் பாம்புகள் வாழும் ஆலமரத்தின் கீழ் சிவலிங்க வடிவில் ஒரு புற்று இருந்தது. இந்தப் பகுதியில் மேய்ந்த பசுக்கள் புற்றில் நிலையாக பாலை சுரந்து வந்தன.

சுயம்பு மூர்த்தியாக எழுந்தருளியுள்ள எம்பெருமானுக்கு அபிஷேகம் செய்த பசுவானது பாம்பினால் தீண்டப்பட்டு பாதிக்கப்பட்ட போது அந்தப் பசுவின் உடம்பின் மீது ஏறிய ஆலகால விஷத்தினை மாயவன் உண்டு பசுவினை காப்பாற்றியதால் ஆல்கொண்டமால் எனவும் ஆலம் உண்ட சிவனை குறிக்கும் வகையில் சிவலிங்க வடிவபுற்றில் கண்ணன் குடி கொண்டதால் ஆல்கொண்டமால் எனவும் இக்கோவில் விளங்கி வருகிறது.

காவல் தெய்வம்

கால்நடைகளின் காவல் தெய்வமாகவும் இந்தக்கோவில் விளங்கி வருகிறது. ஒவ்வொரு ஆண்டும் தமிழர் திருநாள் திருவிழாவின் போது கிராமப்புறங்களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து செல்கின்றனர். மேலும் கால்நடைகளுக்கு நோய் ஏற்படாமல் தடுக்கும் வகையில் கால்நடைகளின் உருவார பொம்மைகளை வைத்து வழிபாடு செய்கின்றனர்.

கறவை பாலைகொண்டு வந்து ஆல்கொண்டமாலுக்கு அபிஷேகம் செய்து திருநீறும் தீர்த்தமும் பெற்று செல்கின்றனர். சோமவாரப்பட்டி ஆல்கொண்டமால் கோவிலில் கும்பாபிஷேகம் நடைபெற்று 12 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதால் கும்பாபிஷேகம் நடத்த ஏதுவாக கோவில் விமானம் பாலாலயம் செய்யும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.


Related Tags :
Next Story