மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா


மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா
x

வில்லியநல்லூர் ஓடக்கரை மகா மாரியம்மன் கோவில் பால்குட திருவிழா நடந்தது

மயிலாடுதுறை

குத்தாலம்;

குத்தாலம் தாலுகா வில்லியநல்லூர் கிராமத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசித்தி பெற்ற ஓடக்கரை மகா மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 10-ம் ஆண்டு பால்குட தீமிதி திருவிழா பந்தக்கால் முகூர்த்தம் செய்து காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் இரவு அம்பாள் வீதி உலா நடைபெற்றது. நேற்று முன்தினம் பால்குட விழா சிறப்பாக நடைபெற்றது. முன்னதாக காவிரி தீர்த்தபடித்துறையிலிருந்து அபயாம்பிகை யானை முன்னே செல்ல சக்திகரகம் பால்குடங்களுடன் 500-க்கும் மேற்பட்டோர் ஊர்வலமாக புறப்பட்டு கேரள செண்டை மேளம் முழங்க முக்கிய வீதிகள் வழியாக கோவிலை அடைந்தனர். பின்னர் கங்கணம் கட்டிக்கொண்டு விரதம் இருந்த பக்தர்கள் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். பின்னர் அம்மனுக்கு 12 திரவியங்கள் கொண்டு பால் அபிஷேகம் நடைபெற்றது. விழாவில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

1 More update

Next Story