கோவில் குடமுழுக்கு
தியாகராஜபுரம் நரபலிஅம்மன், மகாகாளியம்மன், ஆஞ்சநேயர் கோவில் குடமுழுக்கு நடந்தது.
தஞ்சாவூர்
கும்பகோணம் அருகே ஆடுதுறை தியாகராஜபுரம் மெயின் ரோட்டில் நரபலி அம்மன், மகாகாளியம்மன், ஆஞ்சநேயர் கோவில் அமைந்துள்ளது. இங்கு திருப்பணி வேலைகள் நிறைவடைந்ததையொட்டி கடந்த 15-ந்தேதி யாகசாலை பூஜையுடன் குடமுழுக்கு விழா தொடங்கியது. விழாவையொட்டி நேற்று காலை நான்காம் கால யாகசாலை பூஜை நடைபெற்றது. தொடர்ந்து திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவான தேசிக பரமாச்சாரியார் சுவாமிகள் முன்னிலையில் கடங்கள் புறப்பட்டு கோவிலுக்கு வந்தது. பின்னர் நரபலி அம்மன், மகா காளியம்மன் மற்றும் ஆஞ்சநேயருக்கு விமான குடமுழுக்கு நடைபெற்றது. அப்போது ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாலையில் திரண்டு நின்றதால் கும்பகோணம்- மயிலாடுதுறை சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை தியாகராஜபுரம் பகுதி திருப்பணி குழுவினர் மற்றும் கிராமமக்கள் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story