சங்ககிரி வி.என்.பாளையம்சக்தி மாரியம்மன் கோவில் கும்பாபிஷேகம்ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
சேலம்
சங்ககிரி
சங்ககிரி வி.என்.பாளையம் மகா கணபதி, சக்தி மாரியம்மன், நவகிரகங்கள் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது. பொதுமக்கள் ஊர்வலமாக காவிரி புனித தீர்த்தம் கொண்டு வரப்பட்டு அம்மனுக்கு அபிஷேகம், ஆராதனை நடந்தது. தொடர்ந்து மங்கள இசையுடன் பல்வேறு பூஜைகள் செய்யப்பட்டு கோபுர கலசம் வைத்தனர். பின்னர் விநாயகர் பூஜை, தீபாராதனை, மகா கணபதி, சக்தி மாரியம்மனுக்கு அஷ்டபந்தனம் சாத்தப்பட்டது.
நேற்று காலை 2-ம் கால யாகபூஜை நடந்தது. தொடர்ந்து கணபதி, நவகிரகம், சக்தி மாரியம்மன் ஆகியோருக்கு கும்பாபிஷேகம் நடந்தது. இதில் கோ பூஜை, மஹா பிரவேசம், தீபாராதனை நடந்தது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டனர்.
Related Tags :
Next Story